XIII ஒரு புலனாய்வு - page 00 to 04

மறதிக்காரன்  'XIII'  தளத்திற்கு உங்கள் வரவேற்கிறேன் நண்பரே.!

வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற காலத்தை தாண்டிய படைப்புகளை அதன் வாசகர் வட்டம் கொண்டாடிவரும் வழிகள் பலவகைகள்.! அதில் என்னை கவர்ந்த ஒரு வகை ரொம்பவே சிறப்பானவை. திரும்ப திரும்ப படிக்க தூண்டும் படைப்பான 'ஷெர்லாக் ஹோம்ஸ்' வாசகர்கள் வட்டம் முழு தொகுப்பையும் ஒவ்வொரு வருடத்தின் துவக்கநாளான ஜனவரி தொட்டு மார்ச் மாதம் வரையில் மொத்த கதைகளையும் மூன்று மாதங்கள் படிப்பார்களாம்.

அதன் பிறகு ஒவ்வொரு கதைகளை பற்றியும் மீதமிருக்கும் ஒன்பது மாதங்கள் படித்து சிலாகித்த விஷயங்களை பற்றி விவாதித்து கலந்துரையாடி படைப்பை கொண்டாடி தீர்ப்பார்களாம்.
இது வெளிநாட்டில் மட்டுமல்ல...நமது நாட்டிலும் அப்படி ஒரு நடைமுறை உள்ளது, அப்படி படித்து கொண்டாடும் சரித்திரபடைப்புகளில் புகழ்பெற்ற ஒன்றான அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'.!

நமது காமிக்ஸ் உலகிலும் அப்படி சில படைப்புகள் உள்ளன.அதில் 'மின்னும் மரணமும் இரத்தப்படலமும்' அடங்கும்.!! இதில் அதிகம் தமிழில் படிக்கப்படும் ஒரு புத்தகம் 'இரத்தப்படலம்'.! நாமும் அப்படி ஜனவரி முதல் மார்ச் வரையில் படித்து, சிலாகித்த விஷயங்களை தொடரும் மாதங்களில் பகிர்ந்து கொண்டு 'XIII'-ஐ கொண்டாடுவோம் என தோன்றியதின் விளைவே இந்த வருடம் முழுதுமான நீண்ட அலசல் முயற்சி.!

      
  







பக்க எண்கள் வாரியாக வாராவாரம் e-books ஆகவும் இந்த தொடர் PDF வடிவில் வழங்கப்படும். இந்த வார தொடர் டவுண்லோடு செய்ய...

https://www.mediafire.com/download/oeat6omsa6ti1nf


குறிப்பு: பயணப்பாதையின் மீதான காதலில் இலக்கை மறந்து திசைமாறிவிடாமல் இருக்க....
என்றும் இலக்கின் நினைவும்,காமிக்ஸ் மேல் கொண்ட காதல் மாத்திரமே மனமெல்லாம் வியாபித்திருக்க பொருளில்லா பெயரை போடாமல், பொருளுள்ள குறியீடாக வைக்கப்பட்டுள்ளது.

Comments

  1. இவ்வளவு எளிமையாக, கோர்வையாக சிறப்பாக எழுதும் மர்மமனிதர்.,எனக்கும் நண்பர் என்பதில் மிக மிக பெருமைகோள்கிறேன்..அசத்தல் பதிவு நண்பரே... வாழ்க...வளர்க

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பா. You started music.

    ReplyDelete
  4. வார வாரம் ஆரவாரம்..
    அருமை அண்ணா.

    ReplyDelete
  5. அற்புதமான முயற்சி! அருமையான துவக்கம்!
    இரத்தப்படலத்தின் கதாநாயகன் மட்டும் தன்னைத்தேடி அலையவில்லை, அவருடன் நாமும் தான். முதல் கதையில் துவங்கி, திகில்,லயன்,ஸ்பெஷல் என்று வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காலங்களில் அலைந்து சேகரித்த இந்த புத்தகம் இன்று இறுதி வடிவம் நோக்கி....! இந்த காமிக்ஸ் வரலாற்று சாதனையில் நீங்களும் இணைந்துள்ளீர்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

XIII ஒரு புலனாய்வு page 42 to 46

XIII ஒரு புலனாய்வு page 32 to 36

XIII ஒரு புலனாய்வு page 05 to 08